
Author Name:
Marudhan
மருதன் (Marudhan, பிறப்பு ஜூன் 3, 1975), தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். சமூகம், அரசியல், வரலாறு உள்பட பல்வேறு துறைகள் சார்ந்து எழுதி வருகிறார். இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களைச் சந்தித்து நேர்காணல் செய்துவருகிறார்.[1] காலச்சுவடு, இந்து தமிழ் திசை, விகடன் உள்ளிட்ட இதழ்களில் பத்திகள், கட்டுரைகளை எழுதி வருகிறார். 2006-ஆம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.